This Article is From May 21, 2020

கொரோனா விழிப்புணர்வு: மளிகைப் பொருட்கள் வாங்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

உலக சுகாதார அமைப்பான WHO அளிக்கும் தகவல்படி, இந்த விழிப்புணர்வு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

Advertisement
Health Written by

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்

கொரோனா நுண்கிருமி பரவலால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:

1.மளிகை பொருட்கள் வாங்கும் பொழுது சுற்றாரிடம் இருந்து 1 மீட்டர் இடைவெளி விட்டுத் தள்ளி நிற்க வேண்டும். கண், வாய் மற்றும் மூக்கினை தொடாமல் இருக்க வேண்டும்.

2.மளிகைப் பொருட்கள் வாங்க பயன்படுத்தப் போகும் கூடைகளின் கைப்பிடிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

Advertisement

3.கடைகளில் இருந்து வீடு திரும்பியவுடன், சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கைகளை கழுவ வேண்டும். 

4.இதுவரை, பேக் செய்யப்பட்ட பொருட்களினால் கொரோனா நுண்கிருமி பரவும் என்பதற்கான சான்றுகள் இல்லை.

Advertisement

உலக சுகாதார அமைப்பான WHO அளிக்கும் தகவல்படி, இந்த விழிப்புணர்வு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

Advertisement