This Article is From Feb 20, 2019

கேரளாவில் ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

எர்ணாக்குளம் அருகே 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டிடத்திற்கு அருகில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Kochi:

கேரளாவில் ரப்பர் தொழிற்சாலையில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சியில் செயல்பட்டு வந்த அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றன.

5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து உண்டாகியுள்ளது. இதனால் உருவான கரும்புகை சுற்று வட்டாரத்தை சூழ்ந்து வருகிறது. இதையடுத்து பக்கத்து கட்டிடங்களில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 தீயணைப்பு குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கரும்புகை ரப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறி வருகிறது.

.