This Article is From Aug 18, 2018

குடகு வெள்ள மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்!

மோசமான வானிலையில் காரணமாக தேசிய விமானப்படையின் பணி தடைபட்டதாகக் கூறப்பட்டுள்ளது

குடகு வெள்ள மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்!
Bengaluru:

கேரள எல்லையில் உள்ள கர்நாடகா மாவட்டத்தின் குடகு பகுதியில் மழை வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் தற்போது ராணுவமும் இணைந்துள்ளது.

குடகு பகுதிக்குச் செல்லும் அனைத்து போக்குவரத்து வழிகளும் மூடப்பட்டு மிகப்பெரும் அளவில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு குழுவினரும் 60 பேர் கொண்ட இந்திய ராணுவத்தின் டோகரா படையும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிக்க ராணுவத்தின் 73 பேர் கொண்ட பொறியியல் குழு ஒன்று பாதுகாப்பு உபகரணங்கள் உடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளன. 

படகுகள் உடன் கடற்படையின் நீச்சல் வீரர்கள், 31 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு ஒன்று, படகுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உடன் கூடிய தேசிய பேரிடர் நிதி ஆணையம் குழு, 45 பேர் கொண்ட குடிமைப் பாதுகாப்பு குழு மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் அடங்கிய தீயணைப்புத்துறை ஆகிய குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மோசமான வானிலையில் காரணமாக தேசிய விமானப்படையின் பணி தடைபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்று காலை முதல் எம்17 ரக ஹெலிகாப்டர் மீட்புப் பணியில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 873 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 17 நிவாரண முகாம்களில் 573 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய தகவலின் அடிப்படையில் குடகுவில் மட்டும் கடந்த ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில் ஆறு பேர் பலியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வருவாய், மருத்துவம், உணவு, மற்றும் குடிமைப் பணிகளுக்கான குழுக்கள் பல தொடர்ந்து கிராமங்கள் தோறும் பணியாற்று வருகின்றனர். தொலைதொடர்பு இணைப்புக்காக சிறப்புக் குழுவினர் குடகு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா முதல்வர் குமாரசாமி வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து நாளை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்காக இதுவரையில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரள முற்றிலுமாக பாதித்துள்ள வேளையில் கர்நாடகாவின் 16 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்படும் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

.