This Article is From Jan 17, 2019

கொடநாடு விவகாரம்: ஆதாரம் இருந்தால் போலீஸிடம் வழங்கலாம்: ஓ.பி.எஸ்

கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் போலீஸிடம் வழங்கலாம் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கொடநாடு விவகாரம்: ஆதாரம் இருந்தால் போலீஸிடம் வழங்கலாம்: ஓ.பி.எஸ்

கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் போலீசிடம் வழங்கலாம் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். அதில், வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இதையடுத்து, கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை எஸ்.பி செந்தில் குமார் தலைமையில் டெல்லி சென்றது. இந்நிலையில், கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கொடநாடு கொள்ளை விவகாரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. தற்போது இதனை எதிர்கட்சிகள் மீண்டும் எழுப்புகின்றன.  பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ளும். அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன. கொடநாடு விவகாரம் குறித்து ஆதாரம் இருந்தால் போலீஸிடம் வழங்கலாம்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும். கூட்டணி குறித்து நல்ல முடிவு  எடுக்கப்படும். தேர்தல் வரும் போது எதுவும் நடக்கலாம் என கூறினார்.

.