Kolkata: கொல்கத்தா: சிறுவனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த 19 வயது பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 29 ஆம் தேதி அன்று, 8 வயது சிறுவன் ரிஜூ தாஸ் குளியல் அறையில் இருக்கும் தண்ணீர் ட்ரம்மில் மூழ்கி உயிரிழந்துள்ளதை குடும்பத்தினர் கண்டுள்ளனர்.
உயிரிழப்பில் சந்தேகம் இருந்ததால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த காவல் துறையினர், அருகில் இருந்த திண்ணையின் மீது ஏற முயற்சித்து ட்ரம்மினுள் தவறுதலாக விழுந்திருக்கலாம் என சந்தேகித்தனர்.
எனினும், சிறுவன் இறந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, ரிஜூவின் அண்ணன் மனைவி ப்ரியங்கா தாஸ் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
ப்ரியங்காவின் மாமனார் முதல் மகன் சுபர்தாவை காட்டிலும் ரிஜூவிடம் அதிக பாசத்துடன் இருந்த காரணத்தால், கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். தன் கணவன் மீது அன்பு காட்டாமல் இருப்பதற்கு ரிஜூ தான் காரணம் என எண்ணி, கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல் துறையினர் 19 வயது ப்ரியங்கா தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.