This Article is From Jun 07, 2019

’300 மிரட்டல் அழைப்புகள்’: தடைப்பட்ட பீஃப் திருவிழா!

வரும் ஜூன் 23ம் தேதியில் கொல்கத்தா பீஃப் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

’300 மிரட்டல் அழைப்புகள்’: தடைப்பட்ட பீஃப் திருவிழா!

’கொல்கத்தா பீஃப் திருவிழா’ மிரட்டல்களால், ’கொல்கத்தா பீப் திருவிழா’ என பெயர் மாற்றப்பட்டது.

Kolkata:


கொல்கத்தாவில், இந்த மாத கடைசியில் மாட்டிறைச்சி உணவு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தனக்கு தொடர்ந்து மிரட்டல் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்ததாக விழா ஏற்பட்டாளர் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்ச்சிக்கு முதலில் 'கொல்கத்தா பீஃப் திருவிழா' என்றே பெயரிடப்பட்டிருந்தது, விழா ஏற்பாட்டாளருக்கு தொடர்ந்து வந்த மிரட்டல்களால், 'கொல்கத்தா பீப் திருவிழா' என பெயர் மாற்றப்பட்டது. 

இந்நிலையில், இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் தங்கள் முகநூல் பதவில், நாங்கள் போலீசாரிடம் புகார் கொடுக்கலாம் என திட்டமிட்டோம். ஆனால். அதற்குள் நேற்று இரவு ஏற்பட்டாளர்களில் ஒருவருக்கு 300 அழைப்புகள் வந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் நேரடி மிரட்டல்களும் விடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். 

எங்கள் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை. இதனால், நாங்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளோம். இந்த காரணத்திற்காக கொல்கத்தா பீஃப் திருவிழாவை ரத்து செய்துள்ளோம் என கொல்கத்தாவை சேர்ந்த விழா ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

'கொல்கத்தா பீஃப் திருவிழா' கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவு விடுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, முதலில் அந்த உணவு விடுதி மாற்றப்பட்டது. அரசியல் பதட்டத்தை தவிர்க்கவே தேர்தலுக்கு பின்பு இந்த திருவிழாவை நடத்த திட்டமிட்டோம். அப்போதும் அதனை ரத்து செய்யவில்லை என்று அந்த விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

.