இந்த போராட்டத்திற்கு மற்ற மாநில மருத்துவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Kolkata: கொல்கத்தாவில் மருத்துவர்களின் வேலை நிறுத்தம் தீவிரமாக நடந்து வருகிறது. நோயாளிகளின் குடும்பத்தார் இந்த போராட்டத்திற்கு இடைக்கால உத்தரவிட வேண்டும் மனு அளித்திருந்தனர். ஆனால், மருத்துவர்களின் போராட்டத்திற்கு இடைக்கால உத்தரவிட கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
தலைமை நீதிபதி டி.பி.என். ராதா கிருஷ்ணன் மற்றும் நீதிபதி ஸ்வரா கோஷ் ஆகியோர் அடங்கிய ஒரு பிரிவு மாநில அரசிடம் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தி போராட்டத்தை நிறுத்தச் செய்து மீண்டும் பணிக்கு திரும்பச் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
ஜூனியர் டாக்டர்கள் மீது நோயாளியின் உறவினர் ஒருவர் தாக்கியுள்ளார். இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்திற்கு மற்ற மாநில மருத்துவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 21க்கு மாற்றியுள்ளது. மேற்கு வங்கத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். கடந்த 3 நாட்களாக கொல்கத்தாவில் மருத்துவ சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.