இது குறித்த விசாரணைக்கு மெட்ரோ பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்
Kolkata: கொல்கத்தாவில் மெட்ரோ ரயிலில் பயணி ஒருவரின் கை கதவில் சிக்கியதால் உயிரிழுந்துள்ளார். பார்க் ஸ்ட்ரீட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சோகமான சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது.
ரயில் கிளம்பும் நிலையில் நடைமேடையிலிருந்து மெட்ரோ ரயிலுக்குள் ஏற முயன்றார். அப்போது தானியங்கிக் கதவுகள் மூட இவரது கை சிக்கி கதவுக்கிடையில் சிக்கியது. ரயிலின் கதவில் இருந்த சென்ஸார் முறையாக வேலை செய்யவில்லை எனத் தெரிவிகிறது.
இறந்தவர் சாஜல் குமார் கஞ்சிலால் 66 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தெற்கு கொல்கத்தாவில் வசித்து வந்தார். இது குறித்த விசாரணைக்கு மெட்ரோ பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கொல்கத்தா மெட்ரோ நெட்வொர்க் ரயில் பிப்ரவரி 1995இல் தொடங்கப்பட்டது.