This Article is From Oct 05, 2018

கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது, இரவு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை!

புயல் அபாயம் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது, இரவு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை!

கேரளாவின் சில பகுதிகளில் நாளை (அக்.5) கனமழை பெய்ய வாய்ப்பு. (கோப்புப் படம்)

Kolkata:

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும் என்பதால் அவர்களின் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் சேவையை இரவு முழுவதும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அதன் மேலாளர் பிசி சர்மா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், துர்கா பூஜை காலங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிற நகரங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு, மெட்ரோ ரயில் பயண நேரத்தை மிச்சப்படுத்துவதால், அதில் பயணிப்பதையே சவுகரியமாக கருதுகிறார்கள்.

அக்.13ஆம் தேதியிலிருந்து வழக்கமான சேவையோடு காலை 8 மணி முதல் இரவு 11.10 வரையும் பின்னர் நள்ளிரவு 1 மணி முதல் காலை 4 மணி வரையும் ரயில் சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி நேர வாரியாக பிரித்து 250 ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என பிசி.சர்மா தெரிவித்துள்ளார்.
 

.