விமான பயணி ஒருவருக்கு உடல்வெப்பநிலை சாதாரணமாக இருந்த போதும் கொரோனா உறுதி! (Representational)
Kolkata: விமான பயணி ஒருவருகு உடல்வெப்பநிலை சாதாரணமாக இருந்த போதும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து கவுஹாத்தி வழியாக விமானம் மூலம் கொல்கத்தா சென்ற பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளனர். எனினும், அந்த பயனிக்கு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட உடல்வெப்பநிலை சோதனையின் போது, அவரது உடல்நிலை சாதாரண வெப்பநிலையில் இருந்ததாக கொல்கதா விமானநிலை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் மேலும் கூறும்போது, ஜூலை 14ம் தேதி ஸ்பைஸ் ஜெட் மூலம் டெல்லியில் இருந்து கவுஹாத்தி வழியாக கொல்கத்தா வந்த பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட உடல்வெப்பநிலை சோதனையின் போது, அவரது உடல்நிலை சாதாரண வெப்ப நிலையிலே இருந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இதுவரை 34,427 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.