2 இடங்களில் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- சாரதா வழக்கு தொடர்பாக கொல்கத்தா கமிஷனரிடம் விசாரணை நடத்துகிறது சிபிஐ
- சாரதா வழக்கு ஆவணங்களை அழித்ததாக ராஜீவ் குமார் மீது புகார்
- சிபிஐ விசாரணைக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது
Kolkata: கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் ஷில்லாங்கில் வைத்து இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக ராஜீவ் குமார் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.
தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் வைத்து விசாரணை நடத்தப்படவுள்ளது. முதலில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடக்கும். அதன் பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.
பொன்ஸி வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா போலீஸ் கமிஷ்னரிடம் விசாரணை நடத்த கொல்கத்தா வந்தனர். அப்போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மம்தாவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததுடன் மத்திய அரசை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. இதில் ராஜீவ் குமாரை கைது செய்யக் கூடாது என்றும் அவர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று விசாரணை நடைபெறவிருக்கிறது.