This Article is From Jul 31, 2019

தனது திருமண அறிவிப்பை வித்யாசமாக அறிவித்த பிரேம்ஜி? வாழ்த்து சொல்லும் சிங்கிள்ஸ்!

இதுகுறித்த அறிவிப்வை நகைச்சுவையாக  தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமாக வெளியிட்டிருக்கும் பிரேம்ஜி,

தனது திருமண அறிவிப்பை வித்யாசமாக அறிவித்த பிரேம்ஜி? வாழ்த்து சொல்லும் சிங்கிள்ஸ்!

ஹைலைட்ஸ்

  • இவர் வெங்கட்பிரவின் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
  • கேம் ஓவர் டி சர்ட் அணிந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இவர்
  • இவருடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

நடிகர், இசை அமைப்பாளர், பாடகர் என தமிழ் திரைப்படச்சூழலில் தனக்கென தனி அடையாளம் பதித்திருப்பவர் பிரேம்ஜி. கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான இவர் 'கண்டநாள் முதல்' படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நடிப்பார் அல்லது இசை அமைப்பார்.  

திரைத்துறையில் பன்முகத் தன்மை வாய்ந்த கலைஞராக வலம் வரும் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதுபோல் இருக்கிறது.

இதுகுறித்த அறிவிப்வை நகைச்சுவையாக  தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமாக வெளியிட்டிருக்கும் பிரேம்ஜி, ஆணும் பெண்ணும் திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஒவர் என்று எழுதப்பட்ட டி-சர்ட்டை அணிந்துள்ளார்.

பிரேம்ஜியின் இந்த ட்வீட்டை பார்த்த திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

.