This Article is From Nov 26, 2018

''எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார்கள்'' அமெரிக்காவை விமர்சிக்கும் வடகொரியா!

இருநாடுகளுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் இப்போது தான் பேச்சு வார்த்தைக்கு இணங்கியுள்ளது

Advertisement
உலகம் Posted by

வடகொரிய மாகண ஊடகம் ஒன்று அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது. "அமெரிக்கா, குடியர‌சுக்கு எதிராகவும் தங்கள் நாட்டின் விஷயங்களில் அதிகம் தலையிடுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வடகொரியாவிலிருந்து முழுவதுமாக அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டாலும் அமெரிக்கா அதனை நம்பாது. அதிலும் குற்றம் கண்டுபிடிக்கும்" என்று கூறியுள்ளது.

" 'வடகொரியாவுடனான உறவுகளில் தாமதம் ஏற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால், பிரச்னைகள் தீர்க்கப்பட்டாலும், அமெரிக்கா தொடர்ந்து மனித உரிமைகள் மற்றும் சில நிபந்தணைகள் என எங்களை மாறச்சொல்லி எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கும்' என்று வட கொரியாவின் ஆளுங்கட்சியின் அதிகாரி ரோடோங் சின்முன்" தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. 

"வடகொரிய செய்தி நிறுவனமான யோன்ஹப்பில் அமெரிக்கா ஆன்டி ரிபப்ளிக்காக செயல்படுகிறது" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடகொரியாவில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது என்ற புகாருக்கு பின் இந்த குற்றச்சாட்டுகளை வடகொரியா முன் வைத்துள்ளது. அடுத்த மாதம் மனித உரிமைகள் தொடர்பான மசோதாவை அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்யவுள்ளது. இதனை தொடர்ந்து 14 ஆண்டுகளாக அமெரிக்க செய்து வருகிறது.

Advertisement

இருநாடுகளுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் இப்போது தான் பேச்சு வார்த்தைக்கு இணங்கியுள்ளது. வட கொரியா அமெரிக்காவிடம் தடைகளை நீக்க கோரியும். அதற்கு பதிலாக அணு ஆயுத கிடங்குகளை அழிப்பதாகவும் பேச்சு வார்த்தை துவங்கப்பட்டது. 

இந்நிலையில் அமெரிக்க செகரட்ரி மைக்கேல் போம்பியோ தென்கொரிய அதிபரை எச்சரித்துள்ளார். "தென் கொரிய வடகொரியா இடையேயான சன்ஷைன் கொள்கை வேகமாக செயல்படக்கூடாது. முதலில் அணு ஆயுத தளங்கள் அழிக்கப்பட வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.

Advertisement
Advertisement