கார்கில் விஜய் திவாஸ் நாளை முன்னிட்டு, கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் நரேந்திர மோடியும் அஞ்சலி செலுத்தினர்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ‘ஆப்ரேஷன் விஜய்’ தாக்குதலில் மரணித்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இந்த போரில் ஒவ்வொரு வீரரின் பங்கெடுப்பையும், வீரத்தையும், ஒவ்வொரு இந்தியரும் நினைவில் வைத்து மரியாதை செய்கின்றனர், என்றார் குடியரசுத் தலைவர்.
“கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களின், அளப்பரிய தியாகத்துக்கு பெரிய சல்யூட். அவர்களது குடும்பத்துக்கு நாம் என்றென்றும் கடன்பட்டிருக்கிறோம்” என்றும் குடியரசு தலைவர் ட்விட்டரில் பதிவிட்டார்.
பிரதமர் மோடி தனது ட்வீட்டில் “ கார்கில் விஜய் திவாஸான இன்று, ஆப்ரேஷன் விஜய் போரில் தேசத்துக்காக சேவை புரிந்த அனைவருக்கும், நன்றிக் கடன் பட்ட தேசம் அஞ்சலி செலுத்துகிறது. இந்தியா பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த நமது வீரர்கள், அமைதியை சீர்குலைக்க நினைத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர் “ என்றார்.
மேலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை புகழ்ந்து பேசிய பிரதமர் “ கார்கில் விஜய் திவாஸ் ஆப்ரேஷனின் போது நிகரற்ற தலைமை பண்பை வெளிப்படுத்திய வாஜ்பாய் அவர்களை தேசம் என்றென்றும் பெருமையுடன் நினைவில் கொள்ளும். அவர் அனைத்தையும் முன்னெடுத்துச் சென்றார். வீர்ரகளுக்கு ஆதரவாக இருந்தார். உலக அரங்கில் நமது நிலையை தெளிவாக எடுத்துவைத்தார்.” என்று பதிவிட்டிருந்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)