This Article is From Sep 22, 2018

யூனிட் 2-ல் பராமரிப்பு: கூடங்குளம் அணு உலையில் மின்சார உற்பத்தி நிறுத்தம்!

1000 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 2வது யூனிட்டில் நேற்று மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.

யூனிட் 2-ல் பராமரிப்பு: கூடங்குளம் அணு உலையில் மின்சார உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளம் அணு உலை

கூடங்குளம் அணு உலையின் இரண்டாவது யூனிட்டில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், அதில் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்படுவதாக அணுமின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

டீசல் ஜெனரேட்டரில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாயத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1000 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 2வது யூனிட்டில் நேற்று மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஒரு வாரத்தில் டீசல் ஜெனரேட்டரில் தேவையான பணிகள் செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

யூனிட் 1-ல், பராமரிப்புப் பணி காரணமாக கடந்த 25 நாட்களாக மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அணு உலை ஆலை அதிகாரிகள் தகவல் கூறினர்.

2வது யூனிட்டைப் பொறுத்தவரை, 5 மாதங்கள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு கடந்த ஜூலை 22 ஆம் தேதி தான் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2வது யூனிட் அணு உலை, கடந்த ஆண்டு மார் 31 ஆம் தேதி தான் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.