This Article is From Jun 13, 2018

'நன்றி பிரதமரே, ஆனால்…' - மோடிக்கு ட்விஸ்ட் கொடுத்த குமாரசாமி

மோடி எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் கொடுத்தார் குமாரசாமி.

'நன்றி பிரதமரே, ஆனால்…' - மோடிக்கு ட்விஸ்ட் கொடுத்த குமாரசாமி

ஹைலைட்ஸ்

  • இன்று காலை ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி
  • அப்போது, குமாரசாமியையும் ஃபிட்னஸ் சேலஞ்சுக்கு அழைத்தார்
  • இதற்குத்தான் அரசியல் ரீதியாக ரிப்ளை கொடுத்துள்ளார் குமாரசாமி
இன்று காலை ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோ வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் 'இதைப் போல நீங்களும் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிடுங்கள்' என்று அழைப்பு விடுத்தார். ஆனால், மோடி எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் கொடுத்தார் குமாரசாமி.

சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ராகவேந்திர ரத்தோர், பல பிரபலங்களை இணைத்து ஒரு ட்வீட் வெளியிட்டார். அதில் அவர் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, தான் இணைத்த பிரபலங்களையும் அப்படி செய்யுமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பலர் ரத்தோரைப் போலவே வீடியோ வெளியிட்டனர். இப்படி விராட் கோலியும் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார். அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'நீங்களும் ஃபிட்னஸ் வீடியோ வெளியிடுங்கள்' என்று அழைப்பு விடுத்தார். மோடியும் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து, 'விராட், சீக்கிரமே எனது வீடியோவை பகிர்வேன்' என்றார்.

பிரதமர், தான் சொன்னதைக் காப்பாற்றும் வகையில் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது ஃபிட்னஸ் வீடியோவை பகிர்ந்தார். இந்த வீடியோவுடன் அவர், கர்நாடக முதல்வர் குமாரசாமி, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணிக் பத்ரா மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை ஃபிட்னஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

பிரதமரின் அழைப்புக்கு குமாரசாமி, 'நீங்கள் என்னை ட்வீட்டில் இணைத்திருப்பது பெருமையாக உள்ளது. எனது ஆரோக்கியம் குறித்து நீங்கள் அக்கறை காட்டுவதற்கு நன்றி. உடற்யபிற்சி என்பது நாம் எல்லோருக்கும் முக்கியம் என்று நம்புகிறேன். யோகா மற்றும் ட்ரெட்மில் ஓட்டம் என்பது எனது தினசரி உடற்பயிற்சியில் ஒரு அங்கம் தான். இருப்பினும், எனது மாநிலத்தின் வளர்ச்சி பற்றியும் ஃபிட்னஸ் பற்றியும் எனக்கு அதிக முன்னுரிமை உள்ளது. அதற்கு உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்' என்று அரசியல் ரீதியாக பதிலடி கொடுத்தார். 
 
.