This Article is From Feb 24, 2019

கும்பமேளாவில் துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி மரியாதை செய்த பிரதமர் மோடி!

கும்பமேளாவை காண வரும் கோடிக்கணக்கான மக்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவது வழக்கம். இப்படி வரும் கூட்டத்தை சமாளித்து அந்த பகுதியை சுத்தமாக வைத்திருப்பது பெரும் சவாலானது.

விருது பெற்ற துப்புரவு தொழிலாளர்களின் கால்களை சுத்தம் செய்த பிரதமர் மோடி.

ஹைலைட்ஸ்

  • கும்பமேளாவில் துப்புரவு தொழிலாளர்களை பாராட்டினார்.
  • துப்புரவு தொழிலாளர்களின் கால்களை சுத்தம் செய்தார் பிரதமர் மோடி
  • பாராட்டுக்கு பின்னர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
New Delhi:


உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு, துப்புரவு தொழிலாளிகளின் காலை கழுவி மரியாதை செலுத்தினார். இது கும்பமேளா நடைபெறும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கும் துப்பரவு தொழிலாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் சிறப்பாக செயல்பட்டதாக விருது பெற்ற 5 துப்புரவு பணியாளர்களின் கால்களை கழுவி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மரியாதை செய்தார்.

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவை காண வரும் கோடிக்கணக்கான மக்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவது வழக்கம். இப்படி வரும் கூட்டத்தை சமாளித்து அந்த பகுதியை சுத்தமாக வைத்திருப்பது பெரும் சவாலானது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள், 1 லட்சம் கழிப்பறைகள், எத்தனை துப்பரவு தொழிலர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர், என்பதை எல்லாம் நினைத்து பார்க்கவே கடினமாக இருக்கிறது. .அவர்கள் எந்த பாராட்டையும் விரும்பவில்லை. எந்த ஆரவாரமுமில்லாமல் அவர்கள் பணியை அவர்கள் செய்கின்றனர்.

துப்பரவு தொழிலர்கள் எனது சகோதர - சகோதரிகள், அவர்கள் அதிகாலையிலே எழுந்து அந்த பகுதி முழுவதையும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்கின்றனர். பின்னர் நள்ளிரவிலே தூங்குகின்றனர் என்று கூறி பெருமைப்படுத்தினார். பிரதமர் மோடியின் இந்த செயல் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

முன்னதாக, உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும்  திட்டத்தை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

 

.