Read in English
This Article is From Dec 17, 2018

''பணமதிப்பிழப்பு செய்தது சரியான நடவடிக்கை அல்ல'' - NDTV - க்கு ரகுராம் ராஜன் பேட்டி

பண மதிப்பிழப்பு செய்தது சரியான நடவடிக்கை அல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்.டி.டீ.வி.-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

Advertisement
இந்தியா
New Delhi:

பண மதிப்பிழப்பு செய்தது சரியான நடவடிக்கை அல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் என்.டி.டீ.வி.-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் என்.டி.டீ.வி.யின் தலைவர் பிரணாய் ராய்க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
வேலையில்லா திண்டாட்டம்தான் இந்தியாவின் முக்கிய பிரச்னையாக உள்ளது. 90 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள ரயில்வேக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பம் செய்திருக்கின்றனர்.

பணமதிப்பிழப்பு என்பது சரியான நடவடிக்கை அல்ல. இதேபோன்று ஜி.எஸ்.டி. வரியாலும் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவது நாட்டின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இதேபோன்று எரிசக்தி, வங்கிகள் விவகாரத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. அவர்களுக்கான வாய்ப்புகளை நாம் சரியாக ஏற்படுத்தி தரவில்லை. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது, அரசுக்கு அதிக லாபத்தை ஏற்படுத்தி தந்தோம். அரசு வரியைத்தான் விரும்புகிறதே தவிர லாபத்தை விரும்பவில்லை.

Advertisement

நாம் அளிக்கும் புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த நமக்கு வல்லுனர்கள் குழு தேவைப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் பண மதிப்பிழப்பு என்பது சரியான நடவடிக்கை அல்ல. ஜி.எஸ்.டி. நல்ல நடவடிக்கைதான். ஆனால் இந்த நேரத்தில் பலனை அளிக்காது. இந்த இரு பொருளாதார நடவடிக்கையால் இந்தியா பாதிப்புதான் அடைந்துள்ளது.
இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

Advertisement