ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கும் நாடாளுமன்றம் கடந்த செவ்வாய் கிழமை ஒப்புதல் அளித்தது.
New Delhi: ஜம்மூ காஷ்மீர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் உரையாற்றினார் லடாக் எம்.பி., ஹம்யங் செரிங் நம்கியால். அவரது பேச்சை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்திலும் பேசிய வீடியோவைப் பகிர்ந்தார். இந்நிலையில் அவர், “எனது பேஸ்புக் பக்கத்தில் இருக்கும் ஃப்ரெண்ட்ஸ் பட்டியல் 5,000-ஐத் தொட்டுவிட்டது. இனி யாரும் ரிக்வஸ்ட் அனுப்பாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜம்மூ காஷ்மீர்க்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சிறப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நம்கியால், “லடாக் பகுதி மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக யூனியன் பிரதேசமாக தங்கள் பகுதி மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அது தற்போது நடந்துள்ளது. லடாக் பகுதியில் எந்தவித வளர்ச்சியும் இல்லையென்றால் அதற்குக் காரணம், சிறப்பு சட்டப் பிரிவு 370 மற்றும் காங்கிரஸ் கட்சியும்தான்.
அதேபோல காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்டி ஆகியோர், பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிட மாட்டார்கள். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் போட்டி போடுவார்கள். காஷ்மீர் என்பது அவர்களின் குடும்ப சொத்து என்று நினைக்கிறார்கள்” எனறு பேசினார். அவரிடன் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலனாது.
பிரதமர் மோடி மட்டும் அல்லாமல் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவும், நம்கியாலின் உரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், “லடாக் பகுதியில் இருக்கும் நமது சகோதர, சகோதரிகளின் உணர்வுகளை நம்கியால் பிரதிபலித்துள்ளார்” என்று அமித்ஷா பாராட்டினார்.
தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டனது குறித்தும் தனது அரசியல் வாழ்க்கை குறித்தும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய நம்கியால், “2012 ஆம் ஆண்டு நான் ஜம்மூவுக்கு சென்று, பாஜக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டேன். அவர்களின் கொள்கைகளை புரிந்து கொண்டேன். லெ பகுதியின் அலுவலக செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதுதான் அந்த அலுவலகத்தின் குறைந்தபட்ச போஸ்ட். ஆனால் தொடர்ந்து முழு ஆர்வத்துடன் பணி செய்து வந்தேன். தொடர்ந்து நான் கட்சியின் செய்தித் தொடர்பாளராக ஆக்கப்பட்டேன்” என்று விவரித்தார்.
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கும் நாடாளுமன்றம் கடந்த செவ்வாய் கிழமை ஒப்புதல் அளித்தது.