யூனியன் பிரதேசமாக பிரித்ததை நாடாளுமன்றத்தில் வரவேற்று பேசினார்.
New Delhi: சுதந்திர தினவிழாவை, லடாக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி ஜம்யங் செரிங் நம்ஜியால் நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து. இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்ததை நாடாளுமன்றத்தில் வரவேற்று பேசினார். அவர் பேசிய உரை நாடெங்கும் புகழைப் பெற்று தந்தது.
இந்நிலையில் 73வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, காலை 7.30 மணிக்கு கொடியேற்றி உரையாற்றினார்.
லடாக் எம்.பி தனது நண்பர்களுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.
லடாக் எம்.பி நாடாளுமன்றத்தில் பேசிய உரையினை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்திருந்தார்