லடாக் எல்லையில் படைக்குவிப்பில் ஈடுபட்ட சீன ராணுவம் கடந்த மாதம் 15-ம்தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியது.
New Delhi: லடாக் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்டிருக்கும் மோதல் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர். தொலைப்பேசி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
ஆலோசனையின்போது சீனாவின் அத்து மீறல்கள் குறித்தும் எல்லையில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நடைமுறைகள் தொடர்பாகவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் டி எஸ்பரிடம் விவரித்தார்.
அமெரிக்காவின் முயற்சியின்பேரில் இந்த தொலைபேசி ஆலோசனை நடந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆலோசனையின்போது இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
லடாக் எல்லையில் படைக்குவிப்பில் ஈடுபட்ட சீன ராணுவம் கடந்த மாதம் 15-ம்தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் சீன ராணுவம் வாபஸ் பெற்றது.
பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கும் விதமாக சீன முதலீட்டில் இந்தியாவில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் டிக்டாக், ஹலோ உள்பட 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)