বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 25, 2019

தொடர்ச்சியான கருச்சிதைவுக்கு பெண்கள் மட்டும் காரணமல்ல…! ஆய்வு கூறும் தகவல்

கருச்சிதைவுக்கு விந்தணு மிக முக்கிய காரணமாகிறது. பலவீனமான விந்தணு கருச்சிதைவுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Advertisement
Health

விந்தணுவின் டிஎன் ஏ சேதம் காரணமாக பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக நிகழும் கருக்கலைப்பு என்பது ஆணின் விந்து டிஎன்ஏ சேதத்தினால் ஏற்படலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு எண்ட்ஓ 2019 நியூ ஆர்லியன்ஸ் லா என்ற எண்டோகிரைன் சொஸைட்டியின்  வருடாந்திர கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில் விந்தணுவின் டிஎன் ஏ சேதம் காரணமாக பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. 

இந்த ஆய்வு கருச்சிதைவுக்கான காரணங்கள் புதிய இலக்கை எட்டியுள்ளதாக தெரிவிக்கிறது. இதனால் விந்தணு டிஎன் ஏவின் சேதத்தைக் குறைக்க மருந்துகள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம். 

ஒன்று மற்றும் இரண்டு சதவிகித தம்பதியர்களின் தொடர்ச்சியான கருச்சிதைவு 20 அல்லது அதற்கு மேற்பட்ட கருச்சிதைவு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. 

Advertisement

பாதிக்கப்பட்ட பெண்கள் பல பரிசோதனைகளுக்கு உள்ளாகினாலும், சரியான முடிவுகள் இன்னும் எட்டப்படாமலே இருந்தது. தொடர்ச்சியான கருச்சிதைவுக்கு விந்தணு மிக முக்கிய காரணமாகிறது. பலவீனமான விந்தணு கருச்சிதைவுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

இந்த ஆய்வு ஆரோக்கியமான ஆண்கள் 50 பேருடன் கருசிதைவுகள் அனுபவமுடைய பெண்களின் துணையாக இருக்கும் 63 ஆண்களின் விந்தணுகளோடு ஒப்பிட்டனர். மேலும் செக்ஸ் உணர்வைக் கொடுக்கும் டெஸ்டோஸ்டிரோன், அதன் எண்ணிக்கை, விந்தணுவின் நடத்தை மற்றும் மாலிக்குலர் சோதனைகளை செய்தனர்.

Advertisement
Advertisement