This Article is From Jan 01, 2019

லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து உருவாக்கும் மனித சுவர்! எங்கே தெரியுமா?

சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.சிலாஜா, காசர்கோட்டில் சங்கிலியை தொடங்கி வைக்கவுள்ளார். 620 கி.மீ நீள மனித சுவர் எழுப்ப திட்டம்!

620 கி.மீ நீள மனித சுவர் எழுப்ப திட்டம்

Thiruvananthapuram:

ஐய்யப்பன் கோவிலில் பிராத்தனை செய்வதற்கு எல்லா பெண்களும் உரிமை உண்டு  என்னும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை போன்ற பல அநீதிகளை எதிர்த்து, கேரள மாநிலத்தை சேர்ந்த சுமார் 6 லட்ச பெண்கள் வடக்கு கேரளாவின் காசர்கோட் நகரிலிருந்து தெற்கே உள்ள திருவனந்தபுரம் வரை பெண்களை நின்று மனித சங்கிலி சுவர் அமைக்கவுள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.சிலாஜா, காசர்கோட்டில் சங்கிலியை தொடங்கி வைப்பார், பின்னர் சி.பி.ஐ (எம்) தலைவர் பிருந்தா காராத் திருவனந்தபுரத்தில் நின்று வழிநடத்தினார்.

இன்று மதியம் 3 மணிக்கு, பங்கேற்பாளர்கள் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மையங்களில் கூடிய பிறகு ஒரு ஒத்திகை நடைபெறும். பின்னர் சரியாக  4 மணி முதல் 4.15 மணி வரை சுவர் உருவாக்கப்படும். இதில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் பாலின சமத்துவம் மற்றும் மறுமலர்ச்சி கொள்கைகளை நிலைநிறுத்த உறுதிமொழி எடுப்பார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் 28 உச்சநீதிமன்றம் வழங்கிய அனைத்து வயதினர் பெண்களுக்கும் கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்திய மாநில அரசிற்க்கு முடிவை கொண்டவர வலதுசாரி கட்சிகள் மற்றும் பக்தர்களின் ஒரு பகுதியினரால் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர்.

"பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்பது இந்த போராட்டத்தின் ஒரு பாகமாகக் காணப்படுகிறது என்றும்  சாதி, மதம் ஆகியவற்றில் உள்ள அனைத்து நம்பிக்கைகளை அழிப்பதன் மூலம் கேரளாவை மீண்டும் இருள் காலத்திற்கு இழுக்கப்படாமல் தவிர்க்க முடியும்' என்று கடந்த திங்கட்கிழமையன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். 

ஞாயிறன்று கேரள அரசு சார்பாக உறுதிமொழி ஒன்று வெளியிடப்பட்டது, அது பாலின சமத்துவம் மற்றும் மறுமலர்ச்சி மதிப்புகள், மதச்சார்பின்மை போன்ற கருத்துக்களுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாறாக கேரளா மாநிலம் மனநிலை  சரியில்லாதவர்கள் இருக்கும் இடமாக மாற்றிவிடக் கூடாது என்ற கருத்தை முன்வைத்தார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலா இந்த முயற்சியை 'முரண்பாட்டின் சுவர்' என்று கூறிய நிலையில், யு.டி.எஃப் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. முனிர் இந்த சுவர் அமைக்க 'முற்போக்கு இந்து அமைப்புகளிடமிருந்து' மட்டுமே அழைப்புவிட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிகழ்வில் ஆளும் சிபிஐ (எம்), சி.பி.ஐ., ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (SNDP) மற்றும் கேரள புளையர் மஹா சபை (கே.பி.எம்.எம்.) உட்பட 176 க்கும் மேற்பட்ட சமூக-அரசியல் அமைப்புகள் கலந்துக்கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வை சாதி அடிப்படையிலான அமைப்பு, ஆர்எஸ்எஸ் மற்றும் வலதுசாரிக் குழுக்கள், நாயர் சேவை சங்கம் எதிர்த்தது.

மேலும் குடாம்பாஸ் மிஷன் சார்பாக ஜனவரி 1 ம் தேதி சுமார் 1.25 லட்சம் பெண்களுக்கு மேல் இந்த மனித சுவரில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

.