Read in English
This Article is From Oct 27, 2018

“புல்லட் ரயிலுக்கான நிலம் கையகப்படுத்துதல் டிசம்பருக்குள் முடிந்து விடும்”

புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலத்தை கையகம் செய்வது டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு பெற்று விடும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா

குறித்த தேதிக்குள்ளாகவே புல்லட் ரயில் திட்டம் நிறைவுபெறும் என பியூஷ் கோயல் கூறியுள்ளார்

Mumbai:

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. முதல்கட்டமாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 

இதற்கான நிலங்கள் டிசம்பர் மாதத்திற்குள் கையகப்படுத்தப்பட்டு விடும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனை தவிர்த்து, ஆக்ரா - வாரணாசி, டெல்லி - சண்டிகர், மும்பை - பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயிலை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதுபற்றி  மாநாடு ஒன்றில் பேசிய அவர், நிலம் கையகப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டம் முழுவதுமாக நிறைவேற்றி முடிக்கப்படும். 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலுக்கு அடியில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். 

ஜப்பானின் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியுடன் தேசிய அதிகவே ரயில் கழகம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகள் ஆகியவை இணைந்து மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன. 

Advertisement
Advertisement