This Article is From Oct 19, 2018

அமைச்சர், எம்.எல்.ஏக்களுக்கு சொகுசு கார்கள் வாங்க பஞ்சாப் அரசு ஒப்புதல்!

இந்த புதிய வாகனங்களை வாங்குவதன் மூலம் பஞ்சாப் மாநில அரசுக்கு ரூ.80 கோடி செலவு

அமைச்சர், எம்.எல்.ஏக்களுக்கு சொகுசு கார்கள் வாங்க பஞ்சாப் அரசு ஒப்புதல்!

அமரிந்தர் சிங் அரசின் நடவடிக்கைக்கு விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Chandigarh:

முதலமைச்சர், அமைச்சரவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு 400 சொகுசு கார்களை வாங்குவதற்கு பஞ்சாப் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநில அரசு கடும் கடன் சுமையில் தள்ளாடி வரும் நிலையில் சொகுசு வாகனங்களை வாங்குவதால் ரூ.80 கோடியை அரசு செலவு ஏற்படுகிறது.

எனினும், மாநில அரசிடமிருந்து இதுவரை சொகுசு கார்களை வாங்குவதற்கான கொள்முதல் ஆணை எதுவும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஆணையின் படி, முதலமைச்சருக்கு 16 லேண்ட் க்ரூஸர்ஸ் (2 குண்டு துளைக்காத) கார்கள், அவரின் அதிகாரிகளுக்கு 13 ஸ்கார்பியோ கார்கள், சிறப்பு பணி அதிகாரிகளுக்கு 14 மாருதி டிசையர், எர்ட்டிகா, ஹோண்டா அமேஸ் கார்கள். இதை தவிர்த்து அமரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில் 17 அமைச்சர்களுக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களும், 97 எம்.எல்.ஏக்களுக்கு இன்னோவா கிரிஸ்டாஸ் கார்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை முதலமைச்சருக்கு 8 அம்பாஸ்டர் மற்றும் மோன்டரோஸ் கார்கள் உள்ளன. அமைச்சர்களுக்கு டொயோட்டா கேம்ரைஸ் கார்கள் உள்ளன. இன்னோவா கார்கள் பயன்படுத்தி வந்த ஏம்.எல்.ஏக்களுக்கும் தற்போது கார்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சொகுசு வாகனங்கள் கொள்முதலுக்கு, பாரதிய கிசான் ஒன்றியம் உட்பட பல்வேறு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலம் கடும் கடன் சுமையில் தள்ளாடி வரும் நிலையில் இது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றன.

மார்ச் 2018 வருடாந்திர பட்ஜெட்டின் போது, பஞ்சாப் நிதியமைச்சர் மன்பிரீட் பதால் கூறுகையில், மாநில அரசு ரூ.1,95,978 கோடி கடனை எதிர்கொண்டு வருகிறது என்றார். இதனை ஈடு செய்வதற்கு வருமான வரி செலுத்துபவர்களிடம் கூடுதலாக மாதந்தோறும் ரூ.200 வளர்ச்சி வரியாக வசூலிக்கப்படும் என அறிவித்தார்.

.