This Article is From Aug 07, 2020

மூணாரில் பெரும் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு என தகவல்!

முதரிப்பூழா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, தாழ்வான பகுதியான மூணாரில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. 

மூணாரில் பெரும் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு என தகவல்!

மூணாரில் நிலச்சரிவு: தொடர் மழையால் மீட்பு பணிகளில் சிரமம்! (Representational)

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் ராஜமலை பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர். 

வனத்துறை அதிகாரிகளும், மற்றும் பிற அவசர சேவை பணியாளர்களும் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவாதகவும், திரிசூரை சேர்ந்த இரண்டாவது குழு சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில், இடுக்கியின் ராஜமலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, காவல்துறையினர், தீயணைப்பு படையினர், வனத்துறை மற்றும வருவாய்துறை அதிகாரிகள் இந்த மீட்பு பணியில் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திரிசூரை சேர்ந்த மற்றொரு தேசிய பேரிடர் குழு விரைவில் சம்பவ இடைத்தை அடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அந்த பகுதியில் 70 முதல் 80 பேர் வசித்து வந்ததாகவும், இந்த சமயத்தில் அங்கு எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்று சரியாக கூற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதரிப்பூழா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, தாழ்வான பகுதியான மூணாரில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, இடுக்கியில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல், மழை காரணமாக பல சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

.