ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு பொட்கள் வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு பொட்களை வழங்கிய செங்கோட்டையன், சா்க்கரை குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் மடிக்கணிணி வழங்கப்படும்.
மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது போல வரும் காலங்களில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம் என்று அவர் கூறினார்.
மேலும் வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு. கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் கல்வியாளர்களின் கருத்துகளை மாணவர்களிடன் எடுத்துச்செல்ல புதிய தொலைக்காட்சி தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.