நிசார் அகமது தார் பந்திப்போரா மாவட்டத்தின் ஹஜின் என்ற பகுதியை சேர்ந்தவர்.
Srinagar: லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி ஒருவரை போலீசார் மருத்துவமனையில் வைத்து கைது செய்துள்ளனர். இதனால் மிகப்பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிசாரின் சொந்த ஊர் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் என்ற பகுதியாகும். இது வடக்கு காஷ்மீரில் அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் போலீசின் சிறப்பு அதிரடிப்படையினர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகராஜா ஹரி சிங் மருத்துவமனையில் வைத்து, நிசார் அகமதுவை கைது செய்துள்ளனர்.
.
அவர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேலதிக தகவல்களை அதிகாரிகள் விரைவில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.