This Article is From Jun 11, 2018

அரசு உயர் அதிகாரி ஆக யு.பி.எஸ்.சி தேவையில்லை..!?- சர்ச்சையைக் கிளப்பும் புதிய அறிவிப்பு

மத்திய அரசின் கூடுதல் செயலர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்த ஆள் எடுக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது

இந்த அறிவிப்பு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை பெற்று வருகின்றது

ஹைலைட்ஸ்

  • தனியார் துறையிலிருந்து நேரடியாக உயர் பதவிகளுக்கு அரசு பணி அமர்த்தும்
  • ஜாய்ன்ட் செகரட்டரி பதவிகளே அவர்களுக்கு வழங்கப்படும்
  • ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர இந்த முடிவுக்கு வந்துள்ளது
New Delhi: மத்திய அரசின் கூடுதல் செயலர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்த ஆள் எடுக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

10 அரசு துறைகளில் கூடுதல் செயலர் பதவிக்கு தனியார் துறையிலிருந்து எடுக்கும் முடிவை அறிவித்துள்ளது மத்திய அரசின் பெர்னல் ட்ரெயினிங் துறை. யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஐ.ஏ.எஸ் லெவல் அதிகாரிகள் தான் குறிப்பாக இந்த பதவிக்கு வர முடியும் என்கின்ற நிலை உள்ளது. ஆனால், தற்போது இதை மாற்றும் வகையில் விதிகள் திருத்தப்பட்டு உள்ளன. பல ஆண்டுகளாக தனியார் துறையில் மிகச் சிறப்பாக விளங்கும் நபர்களை அரசு துறைகளில் நேரடியாக வேலைக்கு எடுக்கும் நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இது குறித்து தற்போது தான் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. `புதிய யோசனைகள் மற்றும் நடைமுறைகளை அமல்படுத்தும் நோக்கில் தான் இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது' என்று தெரிவித்துள்ளது அரசு தரப்பு.

இந்த விவகாரம் குறித்து வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில், `தாங்கள் வேலை செய்யும் துறையில் மிகச் சிறந்து விளங்கும் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள், கன்சல்டன்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய, சர்வதேச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அரசின் கூடுதல் செயலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பம் செய்பவர்கள் 40 வயதுக்கு மேலாகவும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அனுபவத்துடனும் இருக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிதித் துறை, வருவாய் துறை என்ற பல்வேறு துறைகளில் கூடுதல் செயலர்கள் இந்த முறை மூலம் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நந்தன் நிலகேனி, மான்டெக் சிங் அலுவாலியா, அரவிந்த் சுப்ரமணியம், ரகுராம் ராஜன் போன்றோர்கள் தனியார் துறைகளில் இருந்து வந்து அரசு துறைகளில் சிறந்து விளங்கியது போல தற்போது எடுக்கப் போகும் நபர்களும் சிறந்து விளங்குவர் என்று அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த முடிவு குறித்து பல தரப்புகளிலிருந்து ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. 
.