சமீபத்திய செய்திகள்

செல்போன் பிரியர்களை காத்திருக்க வைக்கும் iQOO 13!

செல்போன் பிரியர்களை காத்திருக்க வைக்கும் iQOO 13!

Tuesday September 24, 2024

iQOO 13 இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். iQOO 13 ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும். 6,150mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்

ஒருமுறை சார்ஜ் செய்தாலே சும்மா நின்னு பேசும் வாட்ச்

ஒருமுறை சார்ஜ் செய்தாலே சும்மா நின்னு பேசும் வாட்ச்

Monday September 23, 2024

Huawei Watch GT 5 Pro பார்சிலோனாவில் நடந்த நிறுவனத்தின் மேட்பேட் சீரிஸ் டேப்லெட் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. டைட்டானியம் அலாய் மற்றும் செராமிக் பாடி ஆகியவற்றைக் கொண்ட 46 மிமீ மற்றும் 42 மிமீ அளவு மாடல்களில் வருகிறது. IP69K சான்றிதழைப் பெற்றுள்ளது. AMOLED திரையைக் கொண்டுள்ளது. 14 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது

புதுசு புதுசா வெளியிட்டு அசத்தும் WhatsApp

புதுசு புதுசா வெளியிட்டு அசத்தும் WhatsApp

Monday September 23, 2024

ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் புதிய தீமில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய UI மூலம் பயனர்களுக்கு பல வடிவமைப்பு விருப்பங்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது பயனர்கள் whatsapp ஸ்டேட்டஸ்களில் மற்றவர்களைக் குறிப்பிட அனுமதிக்கும்

Samsung Galaxy M55s சத்தமில்லாமல் சம்பவம் செய்யும்

Samsung Galaxy M55s சத்தமில்லாமல் சம்பவம் செய்யும்

Saturday September 21, 2024

Samsung Galaxy M55s விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறும். 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் அதே தெளிவுத்திறனுடன் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். 256GB வரையிலான மெமரி, Snapdragon 7 Gen 1 சிப்செட் இருக்கும்.

வேற லெவல் சலுகை!  Jio Diwali Dhamaka சலுகை

வேற லெவல் சலுகை! Jio Diwali Dhamaka சலுகை

Friday September 20, 2024

ரிலையன்ஸ் ஜியோ தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு Diwali Dhamaka பரிசை வழங்கியுள்ளது. . இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் இலவச ஜியோ ஏர் ஃபைபர் சந்தாவைப் பெறலாம். இந்தச் சலுகை தீபாவளி ஷாப்பிங் அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றும் என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

Samsung Galaxy F05 விலையை விட பல வித்தை காட்டும்

Samsung Galaxy F05 விலையை விட பல வித்தை காட்டும்

Thursday September 19, 2024

Samsung Galaxy F05 செவ்வாய் அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 4ஜிபி ரேம் உடன் வருகிறது. இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. 5,000mAh பேட்டரி மூலம் இயங்குகிறது. 6.7 இன்ச் HD+ திரை மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் உள்ளது

Flipkart Big Billion Days Sale 2024 எதுக்கு எல்லாம் ஆபர்?

Flipkart Big Billion Days Sale 2024 எதுக்கு எல்லாம் ஆபர்?

Thursday September 19, 2024

Flipkart Big Billion Days Sale 2024 செப்டம்பர் 27 அன்று தொடங்க உள்ளது. Flipkart Plus இருப்பவர்கள் முன்கூட்டியே செப்டம்பர் 26 அணுகலாம். விற்பனையின் போது, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பலவற்றில் பயனர்கள் பலவிதமான தயாரிப்புகளில் தள்ளுபடி பெறலாம்

நினைத்த மாத்திரத்தில் வந்த  iOS 18 Update

நினைத்த மாத்திரத்தில் வந்த iOS 18 Update

Wednesday September 18, 2024

ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய iOS 18 Update வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. பெரும்பாலும் அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது மற்றும் கடந்த பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு வழங்கி வரும் அம்சங்களை ஐபோன்களுக்கு கொண்டுவருகிறது.

பயராக வேலை செய்யும் Redmi Smart Fire TV

பயராக வேலை செய்யும் Redmi Smart Fire TV

Wednesday September 18, 2024

Redmi Smart Fire TV 4K 2024 இந்தியாவில் இரண்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. Redmi 55 இன்ச் ஃபயர் டிவியை சந்தையில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை. 43-இன்ச் மாடலில் 24W ஸ்பீக்கர்கள் மற்றும் 55-இன்ச் மாடலில் 30W ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும்.

சீன கம்பெனிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் LAVA

சீன கம்பெனிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் LAVA

Wednesday September 18, 2024

Lava Blaze 3 5G இந்தியாவில் திங்களன்று அறிமுகப்படுத்தப்பட்டது. Lava Blaze 2 5G செல்போனின் அடுத்த அப்டேட்டாக வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் கூடிய MediaTek Dimensity 6300 சிப்செட் இதில் உள்ளது. "வைப் லைட்" அம்சத்தையும் கொண்டுள்ளது, இது புகைப்படம் எடுக்கும் போது வெளிச்சத்தை மேம்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது

Listen to the latest songs, only on JioSaavn.com