நரேந்திர தபோல்கர் 2013 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்
Pune: பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேக்கர் என்பவரை புனே நீதிமன்றம் ஜீலை 6 வரை நீதிமன்றக் காவலில் வைக்க புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் அமர்வு சிறப்பு நீதிபதி ஆர்.எம் பாண்டே கடந்த வியாழக்கிழமை புனலேக்கரின் சிபிஐ காவலை ஜூன் 23 வரை வழங்கியிருந்தது.குற்றம் சாட்டப்பட்டவரின் லேப்டாப்பிலிருந்து “குற்றச்சாட்டு ஆவணங்களை மீட்டெடுத்ததாகவும் அது குறித்து விசாரிக்கவேண்டும்” என்று சிபிஐ கூறியிருந்தது.
சஞ்சீவ் புனலேக்கரை காவலில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்று சிபிஐ தெரிவித்த நிலையில் மீண்டும் ஜூலை 6 வரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேக்கர் மற்றும் உதவியாளர் விக்ரம் பாவே ஆகியோரை சிபிஐ மே 25 அன்று கைது செய்தது.
நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவரான ஷரத் கலாஸ்கருக்கு துப்பாக்கிகளை அழிக்க அறிவுரை வழக்கியதாக புனாலேகர் மீது குற்றம் சாட்டப்பட்டது.