Read in English
This Article is From May 02, 2019

'லேஸ் சிப்ஸ்' விவகாரம் - உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறது பெப்சி!!

அரசுடன் ஆலோசனை நடத்திய பின்னர் விவசாயிகளுக்கு எதிரான இழப்பீடு வழக்கை பெப்சி நிறுவனம் வாபஸ் பெற்றிருக்கிறது.

Advertisement
இந்தியா Written by

வழக்கு வாபஸ் பெற்ற விவரத்தை பெப்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லேஸ் சிப்ஸ் விவகாரத்தில், உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கு எதிராக பெப்சி நிறுவனம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. அதனை வாபஸ் பெறுவதாக பெப்சி தற்போது அறிவித்திருக்கிறது. 

பிரபல குளிர்பான நிறுவனமான பெப்சி கோ, லேஸ் சிப்ஸ்களை தயாரித்து வருகிறது. இதுவும் மிக பிரபலமான ஸ்நாக்ஸாக மாறியுள்ளது. உருளைக் கிழங்கு சிப்ஸான இதனை தயாரிப்பதற்கு, FL 2027 என்ற பிரத்யேக கிழங்கு ரகத்தை பயன்படுத்துகிறது. இதற்கான காப்புரிமையும் அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. 

இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த விவசாயிகள் 4 பேர், பெப்சி பயன்படுத்து உருளைக் கிழங்கு ரகத்தை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. காப்புரிமை பெற்று வைத்திருப்பதால், FL 2027 ரக உருளைக் கிழங்கு விதையை பயன்படுத்தியதற்காக, ரூ. 1 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பெப்சி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த விவகாரம் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வழக்கு தொடரப்பட்ட 4 விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர். 

Advertisement

இந்த நிலையில், வழக்கு தொடர்ந்த பெப்சி கோவுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்சி அறிவித்திருக்கிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement