This Article is From Jan 08, 2020

6 பேரை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி!! கரும்புக் காட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டது!

பள்ளிச் சிறுவன் ஒருவர் உள்பட 6 பேர், சிறுத்தைப் புலியின் வேட்டைக்கு பலியாகியுள்ளனர். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சிறுத்தை தனது தாக்குதல் தொடங்கியது.

6 பேரை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி!! கரும்புக் காட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டது!

உத்தரப்பிரதேச மாநிலங்களில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bijnor:

உத்தரப்பிரதேசத்தில் சிறுவன் உள்பட 6 பேரை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலியை, கரும்புக் காட்டுக்குள் வைத்து கிராம மக்கள் சுட்டுப் பிடித்தனர். நேற்று 14 வயதான சிறுவனை சிறுத்தை தாக்கியதிலிருந்து அதனைப் பிடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சிறுத்தைப் புலி தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் வேட்டைக்கு மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இந்த நிலையில், கரும்புக் காட்டுக்குள் சிறுத்தையை பார்த்த கிராம மக்கள் அதனை சுற்றி வழைக்கத் தொடங்கினர். பின்னர், அதனை சுட்டு, சடலத்தை கிராமத்திற்கு இழுத்து வந்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் ராம்காந்த் பாண்டே, போலீஸ் அதிகாரிகள் சங்கீதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சிறுத்தையின் உடல் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதில், சிறுத்தை 7 வயதான ஆண் என்பது தெரியவந்தது. 

சிறுத்தையின் தாக்குதலுக்கு பிரசாந்த் குமார் என்ற 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். இவர் போக்பூர் கிராமத்தை சேர்ந்தவர். அந்த கிராமத்தினர்தான் சிறுத்தையை சுட்டுப் பிடித்துள்ளனர். சிறுவன் பிரசாந்த் குமாரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 

புலி கொல்லப்பட்டது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரசாந்த் குமார் அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆவார். மதிய உணவுக்குப் பின்னர் அவர் பள்ளியை விட்டு வெளியே சென்றிருக்கிறார். போக்பூர் கிராமத்தின் வெளியே, கரும்புக் காட்டுக்கு அருகில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

பிரசாந்த் குமார் கரும்புக் காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென் பாய்ந்து வந்த சிறுத்தை, சிறுவனை காட்டுக்குள் இழுத்துச் சென்று அடித்துக் கொன்றது. 

இந்த சம்பவத்தின்போது சிறுவனை மீட்க முயன்றவர்களும் சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளாகினர். 

சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து நூற்றுக்ணக்கான கிராம மக்கள் சகூடினர். பின்னர் துப்பாக்கி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு, அவர்கள் கரும்புக் காட்டுக்குள் புகுந்தனர். 

இதற்கிடையே, சிறுவன் எதற்காக காட்டுக்கு சென்றான் என்பது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், பள்ளி நேரத்தில் மாணவர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும், அதற்கு ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

.