பள்ளியில் கற்பவற்றை மாணவர்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என சிசோடியா கூறியுள்ளார்.
New Delhi: டெல்லியில் மொழிப்பாடம் தொடர்பாக பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் டெல்லி கல்வித்துறை அமைச்சர் மணிஷ் சிசோடியா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-
தேர்வுக்காக சமஸ்கிருத மொழியை மனப்பாடம் செய்து படிக்க வேண்டாம். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக சமஸ்கிருதத்தை புரிந்து கற்றுக் கொள்ளுங்கள்.
சமஸ்கிருதம் மிக அழகான மொழி. அதை கற்பது மிக எளிது. எனவேதான் பலரும் அதனை கற்று வருகின்றனர்.
பள்ளியில் கற்பவற்றை வாழ்வில் மாணவர்கள் நடைமுறைப் படுத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் யாவும், சமஸ்கிருதத்தை பரப்புவதற்கு பயன்படுத்தப்படவில்லை. மாறாக வாழ்க்கையை அழகாக மாற்றிக் கொள்வதற்கு இந்த நிழ்ச்சிகள் பயன்படும்.
ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கல்வியை பெற்றுக் கொள்ள வேண்டும் என அரசு விரும்பவில்லை. 100 சதவீத குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். இதனால் நாடு முன்னேற்றம் அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)