"இது ஏற்றுக்கொள்ள முடியாதது, இந்த விஷயத்தில் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது" என்று லெபனான் பிரதமர் கூறினார்.
Beirut: உலக முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் போராடிக்கொண்டிருக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் பிரதமர் ஹசன் டயப் தெரிவித்துள்ளார்.
மேலும், ”தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஒரு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ஏற்றுமதி செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.” என செய்தியாளர் சந்திப்பில் டயப் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.