This Article is From Dec 14, 2019

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக இடதுசாரிகளுடன் இணைந்து காங்., போராட்டம்!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முதல்வர் பினராயி விஜயன் டிச.16ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் அளித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக இடதுசாரிகளுடன் இணைந்து காங்., போராட்டம்!

கேரளாவில் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டேன் என்று பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார். (File Photo)

Thiruvananthapuram, Kerala:

கேரளாவில் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. 

இதுதொடர்பாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முதல்வர் பினராயி விஜயன் டிச.16ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் அளித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி நாங்கள் முதல்வரை வலியுறுத்தினோம். அதன்பேரில் அவரும் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நாட்டின் சமத்துவத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், இதுபோன்ற சட்டங்கள் கேரளாவில் நடைமுறைப் படுத்தப்படாது என்றும் தெரிவித்தார்

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு மசோதாவைக் கொண்டு வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இதனிடையே, குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகாலாந்து, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அசாம் மாநிலத்தில் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கவுஹாத்தி, திஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளின் சாலைகளில் டயர்களை தீயிட்டு எரித்தும், வாகனங்களை அடித்து நொறுக்கியும், சாலை மறியலிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்

இதனால், அசாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடை உத்தரவை மீறி நேற்றும் அசாமில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதார். இதையடுத்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், பௌவுத்தர்கள் மற்றும் சீக்கியர்கள், பார்சி, ஜெயின்ஸ், கிறிஸ்துவர்கள் ஆகியோர் 31 டிசம்பர் 2014ல் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

.