This Article is From Sep 25, 2019

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் இடைதேர்தலுக்கு சிபிஎம் ஆதரவை தெரிவித்துள்ளது

சிபிஎம் இடைத் தேர்தல்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற செயல்படும் என்ற உறுதிபாட்டை வெளியிட்டது.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் இடைதேர்தலுக்கு சிபிஎம் ஆதரவை தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டின் அதிமுக அரசு பாஜக தலைமையிலான கூட்டணியின் பினாமியாக தன்னை மாற்றிக் கொண்டது (File)

Puducherry:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சிபிஐ -எம்மின் தமிழக பிரிவு தனது ஆதரவை அறிவித்துள்ளது. 

சிபிஎம்மின் மாநில கூட்டத்தின் மூன்றாம் நாளில் தமிழ்நாட்டில் விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல்களி திமுக மற்றும் கூட்டாளிகளின் வேட்பாளர்களுக்கும், புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியிலும் தனது ஆதரவை அறிவிக்கும்  தீர்மானத்தை நிறைவேற்றியது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் மீது  கட்சி வெளியிட்ட அறிக்கையில் “நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ளது. ” 

விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை தொழில்முனைவோர் ஆகியோரின் மீது அரசு கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசு கார்ப்ரேட்டுக்கு பிடில் வாசிக்கிறது என்று குற்றம் சாட்டியது. 

தமிழ்நாட்டின் அதிமுக அரசு பாஜக தலைமையிலான கூட்டணியின் பினாமியாக தன்னை மாற்றிக் கொண்டது என்றும்  “எந்தவொரு எதிர்ப்பையும் காட்டாமல் மத்திய அரசின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும்” கட்சி குற்றம் சாட்டியது. “மக்கள் விரோத” நிலைப்பாட்டை பின்பற்றுவதால் வரவிருக்கும் தேர்தல்களில் ஒரு பாடம் கற்பிக்க வேண்டியது அவசியம். 

சிபிஎம் இடைத் தேர்தல்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற செயல்படும் என்ற உறுதிபாட்டை வெளியிட்டது. 

தமிழகம் மற்றும் கேரள முதலமைச்சர்கள் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெறவிருந்த சந்திப்பை பல்வேறு தீர்மானங்கள் மூலம் கட்சி வரவேற்றது. 

பொலிட்பீரோ உறுப்பினர்களான ஜி. ராமகிருஷ்ணன், கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், கே. வரதராஜன், யு. வாசுகி மற்றும் சம்பத் மற்றும் செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர். 

.