This Article is From Sep 30, 2019

ஈஷாவின் ‘Cauvery Calling’ முன்னெடுப்புக்கு கைகொடுத்த DiCaprio - எச்சரிக்கும் Activists!

கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி, Leonardo DiCaprio, Cauvery Calling திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்

ஈஷாவின் ‘Cauvery Calling’ முன்னெடுப்புக்கு கைகொடுத்த DiCaprio - எச்சரிக்கும் Activists!

'Cauvery Calling' campaign - "காவேரி நதியோரம் 242 கோடி மரம் நடுவதால், அங்கு எதிர்பாராத சமூக மற்றும் சூழல் சீர்கேடுகள் ஏற்படலாம்" எனக் குற்றச்சாட்டு

ஹைலைட்ஸ்

  • Leonardo DiCaprio, 'Cauvery Calling' திட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறார்
  • Environment Support Group அமைப்பு, அவருக்குக் கடிதம் எழுதியுள்ளது
  • Isha Foundation, குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது
New Delhi:

ஈஷா (Isha) அறக்கட்டளையின் சார்பில், தலைக் காவேரி முதல் கடைமடை வரை கோடிக்கணக்கில் மரம் நட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குப் பிரபல ஹாலிவுட் நடிகரும், இயற்கை வளங்களைக் காக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான லியனார்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio) ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், அவர் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெறக் கோரி, ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு கொதித்துள்ளது. 

Environment Support Group (ESG) எனப்படும் அந்தக் குழு பல தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இந்நிலைநில், அந்தக் குழு செப்டம்பர் 25 ஆம் தேதி, டிகாப்ரியோவுக்கு ஒரு திறந்தநிலை கடிதத்தை எழுதியது. அதில் ‘காவேரி கூக்குரல்' ('Cauvery Calling') முன்னெடுப்புக்கு டிகாப்ரியோ கொடுத்துள்ள ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

“காவேரி கூக்குரல் திட்டத்தின் மிகப் பெரிய பின்னடைவு, அது மிகவும் சாதாரண தீர்வுகளை முன்வைக்கிறது. நதிக் கரையில் மரம் நட்டால் போதும் என்று அது சொல்கிறது. அது மிகவும் தவறு. இந்தத் திட்டம் மூலம், காவேரி நதியோரம் இருக்கும் தனியார் நிலங்களில் மரம் நடப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தத் திட்டத்திற்குத் தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை உண்மைக்குப் புறம்பானவற்றை ஈஷா அறக்கட்டளையும், அதன் நிறுவனருமான சத்குரு ஜக்கி வாசுதேவும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
 

aq43mpmg

Isha Foundation குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளது (Representational)

காவேரி நதியோரம் 242 கோடி மரம் நடுவதால், அங்கு எதிர்பாராத சமூக மற்றும் சூழல் சீர்கேடுகள் ஏற்படலாம். புல்வெளிப் பிரதேசம், வெள்ளம் அதிகம் வரும் இடங்களில் மரம் நடுவதில் வரும் பாதிப்புகள் இதற்கு உதாரணங்களாகும். இந்தத் திட்டத்தின் மூலம் நதிகள் பாதிக்கப்பட்டு, காட்டு விலங்கினங்களுக்கு ஆபத்து ஏற்படலாம்” என்று விரிவாக எடுத்துரைத்துள்ளது. ஈ.எஸ்.ஜி அமைப்பின் கடிதத்துக்கு 90 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி, டிகாப்ரியோ, தனது ட்விட்டர் மூலம், “இந்தியாவின் நதிகள் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல சிறு நதிகள் மாயமாகி வருகின்றன. காவேரி நதியைக் காப்பாற்ற சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து செயலாற்றுங்கள்” என்று பதிவிட்டார். 

காவேரி கூக்குரல் திட்டத்திற்கு பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதற்கு ஈஷா சார்பில், “எந்த விதத்தில் நாங்கள் நதிக்கு எதிரான நடவடிக்கையில் செயல்படுகிறோம் என்று சொல்லப்படுகிறது என்று புரியவில்லை. தமிழக, கர்நாடாக மாநில அரசுகள், இந்திய பிரதமர், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள், விவசாயிகள் உள்ளிட்டவர்களின் ஆதரவோடுதான் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மேற்குறிப்பிட்ட எந்த அமைப்பும் நபர்களும் சாதாரணமாக ஒரு திட்டத்தை ஆதரிப்பவர்கள் கிடையாது” என்று விளக்கம் கொடுத்துள்ளது. 
 

.