சண்டையிட தயாராகும் சிறுத்தை மற்றும் மலைப்பாம்பு
மிகவும் அரிய நிகழ்வாக அனகோண்டா மலைப்பாம்பும், சிறுத்தைப்புலி ஒன்றும் சண்டையிட்டுக் கொண்டன. இந்த வீடியோ காட்சி பார்ப்பதற்கு சுவாரசியமாக உள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் மரா ரிசர்வ் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள வனப்பகுதியில், மலைப்பாம்பும், சிறுத்தைப்புலியும் ஒன்றுக்கொன்று எதிராக சந்தித்துக் கொள்ள சண்டை ஆரம்பமானது.
சிறுத்தைப் புலி பார்ப்பதற்கு அளவில் சிறியதாக காணப்படுகிறது. இந்த சண்டை உணவுக்காக நடந்த சண்டையைப் போல தெரியவில்லை. ஒன்றிலிருந்து ஒன்று தற்காத்துக் கொள்ள நடந்த சண்டையாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
சண்டையின் ஆரம்பத்தில் மலைப்பாம்பின் கை ஓங்கிக் காணப்பட்டது. சிறுத்தையை முழுவதுமாக சுற்றி அதனை விழுங்குவதற்கு மலைப்பாம்பு முயற்சித்தது. இருப்பினும், லாவகமாக செயல்பட்ட சிறுத்தை, பாம்பின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டது.
இறுதியாக, மலைப்பாம்பின் தலையைக் கடித்துக் கொன்றது சிறுத்தை. இந்த அரிய வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Click for more
trending news