This Article is From Jul 04, 2019

தமிழக மக்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார்: ராஜ்நாத் சிங்

மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்

தமிழக மக்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு  கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார்: ராஜ்நாத் சிங்

கிரண்பேடி ட்விட்டை அளித்துவிட்டார் என ராஜ்நாத் கூறியுள்ளார்.

New Delhi:

தமிழக மக்கள் குறித்து கருத்து கூறியதற்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, புதுச்சேரி கவர்னர் ஒரு ட்விட்டில் தமிழக மக்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் கேலி செய்துள்ளார். அரசாங்கம் அவரது கருத்தை ஒப்புக்கொண்டால், அது அவரை ஆதரிக்கிறது என்று அர்த்தம். நான் பதிலளிக்க அவையின் துணைத் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அந்த ட்விட்டை கவனித்தது. இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது எனவும் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் கிரண்பேடி விமர்சித்திருந்தார்.

மேலும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்னைக்கு காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கிரண்பேடியின் இந்தப் பேச்சுக்கு சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கிரண்பேடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், கிரண்பேடியின் கருத்து பற்றி மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங், தமிழக மக்கள் பற்றி கூறிய கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், எழுதப்பட்டவை எனது தனிப்பட்ட கருத்தாக இருந்தன, இருப்பினும் இது தவிர்க்கக்கூடியது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கருத்து பதிவிடவில்லை. எதிர்ப்பு எழுந்தவுடன் உடனடியாக அதனை நீக்கிவிட்டேன் என கிரண்பேடியின் விளக்கத்தை அவர் வாசித்தார்.

.