This Article is From Dec 03, 2019

‘என்னை படிக்க விடுங்கள்!' : திருமணத்தை மறுத்து போலீசில் புகார் அளித்த 11 வயது சிறுமி!!

குழந்தைத் திருமணத்தில் லட்சுமிக்கு உடன்பாடு இல்லை. இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் சட்ட நடவடிக்கை பாயும் என்பதால், திருமண ஏற்பாட்டை மிக ரகசியமாக செய்திருக்கிறார் அவரது தந்தை.

Advertisement
இந்தியா Edited by

மிகுந்த தைரியத்துடன் புகார் அளித்த சிறுமி லட்சுமியை போலீசாரும் அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.

Fatehpur (Uttar Pradesh):

11 வயது சிறுமி ஒருவருக்கு திருமணம் முடித்து வைக்கவிருந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. தைரியம் மிக்க அந்த சிறுமி போலீசில் புகார் அளித்து தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அவரை போலீசாரும் அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவே மாவட்டம் பிகாபூரை சேர்ந்தவர் சுரபன் நிஷாத். இவர் தனது 11 வயது மகள் லட்சுமி தேவி என்பவரை 28 வயது ரோகித் நிஷாத் என்பவருக்கு டிசம்பர் 10-ம்தேதி திருமணம் முடித்து வைக்க ஏற்பாடுகள் செய்திருந்தார்.

இந்த குழந்தைத் திருமணத்தில் லட்சுமிக்கு உடன்பாடு இல்லை. இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் சட்ட நடவடிக்கை பாயும் என்பதால், திருமண ஏற்பாட்டை மிக ரகசியமாக செய்திருக்கிறார் அவரது தந்தை.

Advertisement

இந்தநிலையில் காவல்துறை உதவி எண்ணான 112 –யை சிறுமி லட்சுமி தொடர்பு கொண்டுள்ளார். பின்னர், தனக்கு நேரவிருக்கும் திருமணத்தைப் பற்றியும், அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் குறிப்பிட்டு, தன்னை திருமணத்திலிந்து மீட்டெடுக்கும்படி உதவி கேட்டுள்ளார்.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் காவல்துறை இணைந்து, சிறுமி லட்சுமியை திருமணத்திலிருந்து மீட்டெடுத்துள்ளது.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக லட்சுமியின் தந்தையை போலீசார் கண்டித்துள்ளனர். இதன்பின்னர், லட்சுமி விரும்பியபடியே அவர் படிப்பதற்கு தந்தை சம்மதித்துள்ளார். அவரையும், லட்சுமி ஒழுங்காக பள்ளிக்கு செல்கிறாரா என்பதை கண்காணிக்கவும் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மிகுந்த தைரியத்துடன் புகார் அளித்த சிறுமி லட்சுமியை போலீசாரும் அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement