Read in English
This Article is From Sep 26, 2018

காஷ்மீர் : என்கவுன்டரில் லஷ்கர் தீவிரவாத அமைப்பின் தளபதி சுட்டுக் கொலை

சுமார் 10-க்கும் மேற்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய மாஸ் என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
இந்தியா

கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தீவிரவாதி சுட்டுக்கொலை

Srinagar:

ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா (Lashkar-e-Toiba) அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அபு மாஸ் என்ற அந்த தீவிரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர். வடக்கு காஷ்மீரில் தீவிரமாக செயல்பட்ட அபு மாஸ் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்.
என்கவுன்டர் தொடர்பாக போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், என்கவுன்டர் நடந்த இடத்தில் சில பொருட்களை பறிமுதல் செய்தோம். அதன்படி சுட்டுக் கொல்லப்பட்டவர் அபு மாஸ் என்பது தெரியவந்தது. இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். வடக்கு காஷ்மீர் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

போமாய் பகுதியில் இன்னொரு என்கவுன்டர் நடத்தப்பட்டது. இதில் அப்துல் மஜீத் என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 2015 முதல் மாஸ் பல்வேறு குற்றச் செயல்களை சோப்பூர் மற்றும் ஹந்த்வாரா பகுதியில் செய்து வந்தான். பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்கள் மீதும் அவன் தாக்குதல் நடத்தியுள்ளான். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களில் அவனுக்கு தொடர்பு உள்ளது என்றார்.

Advertisement