Chennai: தி.மு.க தலைவராக பதவி ஏற்ற பிறகு தனது முதல் உரையில் மோடியின் பா.ஜ.க அரசை நேரடியாக விமர்சித்துள்ளார். “ இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டா வா” என்று தனது தொண்டர்களை அழைத்துள்ளார்.
அதுமட்டும் அல்ல மாநில அரசையும் தாக்கிப் பேசியுள்ளார் “சுயமரியாதையை இழந்து, தமிழக மக்களின் நலைனை கூரு போட்டு கொள்ளையடித்து வருகிறது மாநில அரசு. அதைத் தூக்கி எறிய வா" என்றும் தனது தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் ஸ்டாலின்.
தலைவரானது பற்றி பேசிய அவர் “ நான் தலைவனாவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. நான் முன்னே செல்கிறேன் என்று கூறமாட்டேன். நீங்களும் வாங்கள், அன்னைவரும் ஒன்றாக செல்வோம் என்று கூறுகிறேன். யார் தவறு செய்தாலும், ஏன் நானே தவறு செய்தாலும் தட்டிக் கேளுங்கள்” என தொண்டர்களை உற்சாகப்படுத்தும் உரையை நிகழ்த்தியுள்ளார்.
“பகுத்தறிவு, சமூக நீதி, சமத்துவம் மற்றும் சுயமரியாதை ஆகிய நான்கு தூண்களால் ஆனது தி.மு.க. மாநில அரசிடம் சுயமரியாதை இல்லை, மத்திய அரசிடம் சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு என்ற எதுவும் இல்லை. கல்வி, கலை, இலக்கியம், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளை மதவெறிக் கொண்டு அழிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. சமூக அநீதிகளை அழித்து, திருடர்கள் கையில் இருந்து தமிழகத்தை விடுவிப்பதே நமது முதல் கடமை.” மத்திய மாநில அரசுகளை கடுமயாக விமர்சித்து தனது முதல் உரையை நிகழ்த்தியுள்ளார்.