This Article is From May 07, 2020

விசாகப்பட்டினம் விஷ வாயுக்கசிவு: அனைவரின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்போம்: பிரதமர் மோடி

பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவிலும், 11 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் விஷ வாயுக்கசிவு: அனைவரின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்போம்: பிரதமர் மோடி

Vizag gas leak: விஷ வாயுக்கசிவு தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் கருத்து

New Delhi:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ரசாயன ஆலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, விசாகப்பட்டினத்தின் தற்போதைய நிலைமை குறித்து உள்துறை அமைச்சகத்துடனும், தேசிய பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகளுடனும் ஆலோசித்தேன். தொடர்ந்து, இந்த விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறேன். விசாகப்பட்டினத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவை தொடர்ந்து, பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவிலும், 11 மணி அளவில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், விசாகப்பட்டினம் விஷவாயு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விசாகப்பட்டினம் மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


விசாகப்பட்டினத்தில் நடந்த சம்பவம் கவலை அளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன். நாங்கள் தொடர்ந்து நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விசாகப்பட்டினம் மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன், ”என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் ட்வீட் செய்துள்ளார், அதில், சம்பவத்தை கேள்விப்பட்டு, தான் "அதிர்ச்சியடைந்தாக தெரிவித்துள்ளார். மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள தலைவர்களைக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விஷவாயு கசிவால் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து,விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன எரிவாயு ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோபால்பட்டினத்தில்  எல்ஜி பாலிமர்களில் எரிவாயு கசிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து யாரும் வீடுகளைவிட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாகப்பட்டின மாநகராட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
 

.