This Article is From Jul 13, 2019

3,500 புத்தகங்களுடன் நூலகம் நடத்தும் 12 வயது சிறுமி!!

யசோதா நூலகம் என்ற பெயரில் சிறுமி யசோதா நூலகம் நடத்துகிறார். அதில் 110 உறுப்பினர்கள் உள்ளனர்.

3,500 புத்தகங்களுடன் நூலகம் நடத்தும் 12 வயது சிறுமி!!

புத்தகங்களின் மீது கொண்ட காதல் காரணமாக சிறுமி நூலகத்தை நடத்துகிறார்.

Kochi:

கேரளாவில் புத்தகங்கள் மீது கொண்ட பேரார்வம் காரணமாக 12 வயது சிறுமி யசோதா நூலகத்தை நடத்தி வருகிறார். கொச்சியில் 'யசோதா நூலகம்' என்ற பெயரில் நடத்தப்பட்டு இந்த நூலகத்தில் 3,500 புத்தகங்கள் உள்ளன. 

உறுப்பினர்களாக மொத்தம் 110 பேர் உள்ளனர். நூலகம் நடத்துவது குறித்து சிறுமி யசோதா கூறுகையில், 'எனது நூலகத்தில் 2,500 மலையாள மொழி புத்தகங்களும், 1,000 ஆங்கில புத்தகங்களும் உள்ளன. அனைவரும் இலவசமாக இங்குள்ள புத்தகங்களை படித்துச் செல்லாம்

இந்த நூலகம் குறித்து பேஸ்புக்கில் எனது தந்தை பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிலர் எனது நூலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பாக அளித்தனர்' என்றார். 

3-ம் வகுப்பு படிக்கும்போதே வாசிப்ப பழக்கத்தை யசோதா கடைபிடித்து வருகிறார். ஒருமுறை நூலகத்தில் வாங்கிய புத்தகத்தை திருப்பி அளிக்க தாமதம் ஆனதால் அவர் அபராத தொகை செலுத்த நேர்ந்தது. இதனால் காசே இல்லாத ஏழை மக்கள் எப்படி புத்தகம் படிப்பார்கள் என்று எண்ணிய யசோதா, இலவச நூலகத்தை ஆரம்பித்துள்ளார். 

வழக்கறிஞராக ஆக வேண்டும் என்பது யசோதாவின் விருப்பமாக உள்ளது. இதுகுறித்து அவரது தந்தை தினேஷ் கூறுகையில், 'புத்தக வாசிப்பில் யசோதாவுக்கு விருப்பம் அதிகம். அது அனைவருக்கும் இலவசமாக்கப்பட வேண்டும் என்பது அவளது ஆசையாக உள்ளது. எனது மகனும் யசோதாவுடைய நூலகத்தில் உறுப்பினராக உள்ளார். எனது மகளை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்' என்றார். 

.