Read in English
This Article is From Apr 19, 2019

லிபியாவில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால் இந்தியர்கள் வெளியே சுஷ்மா அறிவுறுத்தல்!!

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் வன்முறை வெடித்துள்ளது. இங்கு கடந்த 2 வாரங்களில் மட்டும் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

தலைநகரில் இருப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

New Delhi:

லிபியா நாட்டில் பெரும் கலவரம் வெடித்திருப்பதால் உயிருக்கு உத்தவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகர் திரிபோலியில் உள்ள இந்தியர்களை வெளியேறும்படி வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார். 

அங்கு ராணுவ கமாண்டர் கலிபா ஹப்தால் தலைமையிலான படை ஐ.நா. ஆதரவு பெற்ற பிரதமர் பயாஸ் அலி சராஜுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். 

தலைநகர் திரிபோலியில் நடக்கும் வன்முறை வெறியாட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனால் அங்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

இந்த நிலையில் அங்குள்ள இந்தியர்கள் திரிபோலியை விட்டுவெளியேறும்படி மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், 'லிபியாவில் நிலைமை மீறிச் சென்றதை தொடர்ந்து அங்குள்ள இந்தியர்கள் பலர் வெளியேற்றப்பட்டனர். அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் திரிபோலியில் சுமார் 500 இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை மீட்பது கடினமாகி விடும்'' என்று தெரிவித்துள்ளார். 

Advertisement