This Article is From Aug 21, 2018

கேரள வெள்ளம்: மக்கள் விரைவாக காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக விதிகளைத் தளர்த்திய எல்ஐசி

எல்ஐசி கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக காப்பீட்டுத் தொகையை அளிக்கும் விதத்தில் பல எளிய நடைமுறைகளை அறிவித்துள்ளது

Advertisement
இந்தியா Posted by

அரசு ஆயுள்காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக காப்பீட்டுத் தொகையை அளிக்கும் விதத்தில் பல எளிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.

“எங்கள் வட்டார, கோட்ட, கிளை அலுவலக அதிகாரிகள் மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கான காப்பீட்டுத் தொகையை வழங்க அரசு, மாவட்ட அலுவலர்களுடன் தொடர்பில் உள்ளனர். நடைமுறைகளை எளிமைப்படுத்தியதுபடி இறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்ற விதியைத் தளர்த்தியுள்ளோம். அதற்கு மாற்றாக, அரசு அதிகாரிகள் அளிக்கும் வேறு உரிய சான்றுகளை ஏற்றுக்கொள்வோம். சிலசமயம், எல்லாம் சரியாக இருந்தால் காப்பீட்டு முகவர் அளிக்கும் சான்றே கூட போதுமானது. எனினும் இதில் சில நிபந்தனைகள் உண்டு. இல்லையெனின் வளர்ச்சி அதிகாரி இறப்பினை உறுதி செய்யவேண்டும். பேரிடர் உண்டான நாளிலிருந்து முப்பது நாட்களுக்கு ப்ரீமியம் தொகையைத் தாமதமாக செலுத்தினால் அதற்குக் கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. மேலும் பிரதான் மந்த்ரி ஜீவன் பீம யோஜனா திட்டத்தின்கீழ் அளிக்க வேண்டிய காப்பீட்டு தொகைகளை விரைவாக வழங்க சம்பந்தப்பட்ட வங்கிகளுடனும் எல்ஐசி பேசி வருகிறது. இத்துடன் கோட்ட, கிளை அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்படும். பாலிசி தொடர்பான ஐயங்கள் தீர்க்கப்படும். விரைந்து காப்பீட்டுத் தொகையைப் பெறவும் வழிவகை செய்யப்படும். சிறப்புப்படை மூலம் சில தேவைப்படும் பாலிசிதாரர்களுக்கு சலுகைகள் உதவிகள் சரியாக சென்று சேர்வதும் உறுதி செய்யப்படும். இவை போக பதினான்கு மாவட்டங்களிலும் மாஹேவிலும் சிறப்பு அலுவலர்களை பொதுமக்களின் உதவிக்காக நியமித்துள்ளோம்” என்றும் LIC நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement