This Article is From Jul 04, 2018

டெல்லி அரசுக்கே அதிகாரம்: ஆம் ஆதிமிக்கு பெரும் வெற்றியை தந்த தீர்ப்பு

அதிகாரிகளின் இந்த போரட்டம், டெல்லி தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ், தான் ஆம் ஆத்மி அமைச்சர்களால் தாக்கபட்டதாக கூறியதால் தொடங்கியது

New Delhi:

டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, அரசு விவகாரங்களில் தன்னிப்பட்ட முடிவெடுக்கம் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே இருப்பதாக நெத்தியடி தீர்ப்பை தந்துள்ளது, 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு. இந்த தீர்ப்பு, துணை நிலை ஆளுநருடன் முட்டி மோதிக் கொண்டிருந்த ஆம் ஆத்மி அரசுக்கு பெரிய வெற்றியை தந்துள்ளது. மாநில அரசு முடிவெடுக்க முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், துணை நிலை ஆளுநர் அதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.

தீர்ப்பு குறித்தி தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்:

1. “கேபினெட்டில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் துணை நிலை ஆளுநருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால், அனைத்து முடிவுகளையும் செயல்படுத்த அவரின் ஒப்புதல் அவசியமில்லை” என்கிறது உச்ச நீதிமன்ற அமர்வு.

2. அரசியல் அமைப்பின் படி நிலம் அதிகாரம், காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாடு ஆகியவை டெல்லி அரசிடம் கொடுக்கப்படவில்லை. ஆனால், மற்ற விஷயங்களில், மாநில அரசின் வழிகாட்டுதல் மற்றும் தேவையின் படி தான் துணை நிலை ஆளுநரின் செயல்பாடு இருக்க வேண்டும் என்கிறது நீதிமன்றம்.

3. நில உரிமை, காவல் துறை மற்றும் சட்டம் ஒழுங்கை அதிகாரத்தை தவிர்த்து மற்ற விஷய்ங்களில் துணை நிலை ஆளுநர் தனிப்பட்ட முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

4. “துணை நிலை ஆளுநர் என்பவர் ஒரு ஆட்சியாளர். அவர் ஆளுநர் அல்ல. கேபினெட் எடுக்கும் முடிவுகளின் வரம்புக்குள் தான் அவரின் செயல்பாடு இருக்க வேண்டும்” என்றது உச்ச நீதிமன்ற அமர்வு.

5. டெல்லி அரசும் துணை நிலை ஆளுநரும், பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே சுமூகமான உறவு நிலவ வேண்டும் என்றும் நீதிமன்ற தெரிவித்துள்ளது.

6. சில நாட்களுக்கு முன் உயர் அதிகாரிகளின் பணி புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு வர துணை நிலை ஆளுநர் தலையிட வேண்டும் என கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியினர் 9 நாட்கள், துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

7. அதிகாரிகளின் இந்த போரட்டம், டெல்லி தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ், தான் ஆம் ஆத்மி அமைச்சர்களால் தாக்கபட்டதாக கூறியதால் தொடங்கியது.

8. கெஜ்ரிவாலின் இந்த போராட்டம், அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதால் முடிவுக்கு வந்தது. அதே நேரம், மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் என்று, ஆம் ஆத்மி கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கியது.

9. துணை நிலை ஆளுநர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், டெல்லி அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.

10. இந்த அதிகார மோதல் 2015-ம் ஆண்டு டெல்லி மாநில ஆட்சிப் பொருப்பை ஆம் ஆத்மி ஏற்றுக் கொண்டதில் இருந்து தொடர்ந்து வருகிறது. மத்திய பா.ஜ.க அரசு, ஊழல் தடுப்பு துறையை டெல்லி அரசிடம் இருந்து பறித்தபோது முதல் பிரச்சனை தொடங்கியது. மேலும், மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு, துணை நிலை ஆளுநரின் அனுமதி கட்டாயம் வாங்க வேண்டும் என்ற சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்ததால், பிரச்சனை தீவிரமடைந்தது.

.