சீனாவில் பூண்டு சாகுபடி செய்து வரும் சூகு யுயி (40), தனது சிறு வயது முதல் தனக்கென்று சொந்தமாக ஒரு விமானம் வாங்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டிருந்தார்.
‘அர்பஸ் ஏ.230 எனப்படும் ரகத்தை சேர்ந்த விமானத்தின் அசல் மாதிரியை அவர் உருவாக்கியுள்ளதாகவும், அந்த விமானத்தின் கட்டுமானத்திற்காக சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கடந்த 2 வருடங்களாக கட்டுமான பணிகளை மேற்கொண்டுவருவதாகவும், தி சன் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
மேலும், தொழிற்கூடத்தில் உருவாகிவரும் இந்த விமானம் 40 அடி உயரமும்,118 அடி அங்குலமும் கொண்டது. ‘மேலும் தான் இந்த விமானத்தில் பறக்க முடியாத காரணத்தால், அவர் இதை உணவகமாக்க மாற்றி அமைக்க முடி வெடுத்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் கட்டுமானப் பணிகளை முடிபதில் ஆர்வம் காட்டுவதாகவும் சூகு கூறியுள்ளார்.
இவ்விமானத்தைக் கட்டமைக்க சூகுவின் 5 நண்பர்கள் கடந்த 2 வருடங்களாக உதவி செய்துள்ளதாகவும், தனது நீண்ட நாள் கனவை தற்போது நிறைவேற்றியுள்ளதாக பெருமிதம் கொள்கிறார், சூகு.
Click for more
trending news