போக்குவரத்து காவல்துறை அதிகாரி போன்ற தோற்றத்துடன் ஆளுயர பொம்மை
கர்நாடக காவல்துறை, நகரங்களில் முக்கிய பிரச்னையாக இருக்கும் போக்குவரத்து நெருக்கடிக்கு புதுமையான தீர்வை கொண்டு வந்துள்ளது.
போக்குவரத்து காவல்துறை அதிகாரி போன்ற தோற்றத்துடன் ஆளுயர பொம்மை ஒன்றை நிறுத்தி நிற்க வைத்துள்ளனர். பொம்மைக்கும் சீருடைகள், பூட்ஸ், ஜாக்கெட் மற்றும் தொப்பிகள் கொண்டு அலங்கரித்துள்ளனர்.
பெங்களூரின் கெங்கேரி போக்குவரத்து காவல்துறை ஆளுயர பொம்மையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. மது ஜங்ஷனில் போக்குவரத்து நிர்வாகத்திற்காக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரத்தில் பிற பகுதியிலும் பணிக்காக வைக்கப்பட்ட ஆளுயர பொம்மைகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். காவல்துறையின் தனித்துவமான முயற்சியை பலர் பாராட்டியுள்ளனர்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பெங்களூர் இணை காவல்துறை ஆணையர் பி.ஆர் ரவிகாந்த கவுடா பதிலளித்தார். “ இந்த முன் முயற்சிக்கு நேர்மறையான பதில் கிடைத்துள்ளது. மக்கள் ஆளுயர பொம்மைகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். போக்குவரத்து விதியை மீறுபவர்களை கட்டுபடுத்த இது பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதி மீறல்களை பதிவு செய்ய ஆளுயர பொம்மையில் கேமராவை பொருத்தவும் பெங்களூர் போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டு வருகிறது.
Click for more
trending news